அரும்பு - 5 years and below
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல - கடவுள் வாழ்த்து
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை
Anyone who constantly thinks of a god who treats everyone equally will never experience the troubles of the world.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல - அறன்வலியுறுத்தல்
அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா .
True happiness comes from living a good and honest life; anything gained otherwise only brings pain and no respect.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு - அன்புடைமை
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்
Love makes us kind and likable to others, creating strong friendships with everyone.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல் - மக்கட்பேறு
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும் .
A son’s best way to repay his father is to live so well that others admire the father for having such a son.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் - இனியவை கூறல்
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
Speaking kind and helpful words benefits both the person and the community, reducing harm.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது - செய்ந்நன்றி அறிதல்
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது
Help given with love is more valuable than the ocean, even without expecting anything in return.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு - அடக்கமுடைமை
அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.
Self-control is the greatest wealth. Protect it, as there is nothing more valuable.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும் - ஒழுக்கமுடைமை
ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது
Since good character brings success, it is considered more valuable than life itself.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் - ஒழுக்கமுடைமை
உலகத்தாரோடு பொருந்தி ஒழுகும் தன்மையை அறியாதவர், பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர்.
A person who can't get along with others, even if they’ve learned a lot, is still not wise.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை - பொறையுடைமை
தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்
The greatest virtue is to tolerate those who insult you, just as the earth supports those who dig it.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும் - பொறையுடைமை
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.
The world praises those who live with patience as the most complete individuals.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு - அழுக்காறாமை
உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.
Adopt the quality of living without envy in your heart as your own virtue.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது - புறங்கூறாமை
ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது .
It is best for a person to avoid speaking badly about others, even if they make mistakes.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு - செய்ந்நன்றி அறிதல்
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை
A person may forget virtue and still live, but one who forgets the help they received has no true life.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு - நட்பு
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.
True friendship is not just about showing a friendly face; it is about loving with all your heart.