மொட்டு - 6 - 8 years

செய்யுள் : பாரதியார் பாடல் 

ஓடி விளையாடு பாப்பா, - நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,

கூடி விளையாடு பாப்பா, - ஒரு

குழந்தையை வையாதே பாப்பா

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்

பசுமிக நல்லதடி பாப்பா;

வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது

மனிதர்க்குத் தோழனடி பாப்பா

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்

சோர்ந்துவிட லாகாது பாப்பா,

அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - தாய்

சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,

தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ

திடங்கொண்டு போராடு பாப்பா

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;

நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்

திருக்குறள்:

  மெலியார்மேல் செல்லு மிடத்து. - அருளுடைமை 

   அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச்     செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க. 

When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself. 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 தன்நெஞ்சே தன்னைச் சுடும்.- வாய்மை 

    பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால்,   

 அதைப் பொய்  என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும். 

   Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with    the memory of his guilt). 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 மனக்கவலை மாற்றல் அரிது.- கடவுள் வாழ்த்து

    தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable. 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

செயற்கரிய செய்கலா தார்.- நீத்தார் பெருமை

    பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே. 

The great will do those things which is difficult to be done; but the mean cannot do them.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இழுக்கா இயன்றது அறம். - அறன் வலியுறுத்தல் 

    பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம். 

That conduct is virtue which is free from these four things, viz, malice,desire, anger and bitter speech. 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

புன்கணீர் பூசல் தரும்.- அன்புடைமை 

   அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும். 

Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within. 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

மடமை மடவார்கண் உண்டு. - விருந்தோம்பல் 

    செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும். 

That stupidity which exercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid. 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

வன்சொல் வழங்கு வது? -இனியவை கூறல் 

    பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ? 

Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ? 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

விழுமந் துடைத்தவர் நட்பு - செய்ந்நன்றி அறிதல் 

    தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்.

(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction. 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

செல்வர்க்கே செல்வம் தகைத்து.- அடக்கமுடைமை 

    செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும். 

Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches. 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

கற்றனைத் தூறும் அறிவு. - கல்வி 

    மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும். 

Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning. 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

திறன்தெரிந்து கூறப் படும். - புறங்கூறாமை

    அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும். 

The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published. 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

வழுக்கியும் வாயாற் சொலல்.- ஒழுக்கமுடைமை

   மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது. 

Those who study propriety of conduct will not speak evil, even forgetfully. 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

சொல்லிற் பயனிலாச் சொல். - பயனில சொல்லாமை 

   சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா. 

When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself. 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

செறுவார்க்கும் செய்யா விடல். - தீவினையச்சம் 

    தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.

 To do no evil to enemies will be called the chief of all virtues.