மலர் – 12 - 15 years
செய்யுள்
பாடல்
இன்னா செயினும், விடற்பாலர் அல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல் வேண்டும்-பொன்னொடு
நல் இல் சிதைத்த தீ நாள்தொறும் நாடித் தம்
இல்லத்தில் ஆக்குதலால்.
பொருள்
என்றோ ஒரு நாள், ஒரு விபத்து மூலமாக, ஒரு அசாதரண சூழ்நிலையில் தீ நமக்கு துன்பம் விளைவித்து விடலாம். அதனால் வரும் துன்பம் பெரியதுதான். இல்லை என்று சொல்வதற்கு இல்லை. ஆனால், அப்படி ஒரு துன்பம் தந்த தீ இனிமேல் என் வீட்டில் இருக்கக் கூடாது என்று யாராவது சொல்லுவார்களா? தீ இல்லாமல் உணவு சமைக்க முடியாது.அது போல நண்பர்களும், சில சமயம் நமக்கு பெரிய தீங்கு செய்துவிட்டாலும், அதை ஒரு விபத்து என்றே எடுத்துக் கொண்டு, அவர்களை விட்டு விடக் கூடாது.அதற்காக எல்லா நண்பர்களையும், எல்லா சமயத்திலும் என்று சொல்லவில்லை. சில நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் நமக்கு பல உதவிகள் செய்து இருப்பார்கள். நம் மேலும், நம் குடும்பத்தின் மேலும் மிகுந்த அக்கறை உள்ளாவர்களாக இருப்பார்கள். ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால், அவர்களின் ஒரு செயல் நமக்கு துன்பம் தந்து இருக்கலாம். அதற்காக அவர்களை விட்டு விடக் கூடாது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
திருக்குறள்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது- செய்ந்நன்றி அறிதல்
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது
Even if we haven't done any good for someone, if they help us, even giving them the earth and the heavens in return wouldn't be equal.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது - செய்ந்நன்றி அறிதல்
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்
Help given in times of need, even if small, is valued more than the entire world.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது - செய்ந்நன்றி அறிதல்
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது
Without considering any benefit, help given out of love is greater than the ocean in its significance.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் - செய்ந்நன்றி அறிதல்
தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்
Even if the help received is as small as a millet seed, one who understands its value will regard it as immense, like a palm tree.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து - செய்ந்நன்றி அறிதல்
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்
Help is not measured by the amount given; its value is determined by the character of the person receiving it.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு - செய்ந்நன்றி அறிதல்
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது
We should not forget the bond with the pure-hearted, nor abandon the friend who stood by us in hardship.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு - செய்ந்நன்றி அறிதல்
தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்
The friendship of the one who relieves his suffering is good even in seven births.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று - செய்ந்நன்றி அறிதல்
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது
It is not good to forget the kindness someone has shown us; however, if they have done any harm, it is best to forgive and forget it immediately.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும் - செய்ந்நன்றி அறிதல்
முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.
Even if someone who once did us great kindness later causes us harm as severe as attempted murder, the memory of their past kindness will overshadow that harm.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு - செய்ந்நன்றி அறிதல்
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை
There is life even for those who forget righteousness; but there is no life for those who forget a kindness done to them.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் - அடக்கமுடைமை
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்
Self-control brings lasting fame, while a lack of it brings ruin.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு - அடக்கமுடைமை
மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும் அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.
The greatest thing to protect with strong determination is self-control; nothing else can bring more wealth than it.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின் - அடக்கமுடைமை
அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.
Living with self-control is true wisdom. When a person lives with self-discipline, their restraint is recognized by good people, and it brings them honor.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது - அடக்கமுடைமை
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
The greatness of one who remains steady and self-controlled, without deviating from their position, is far greater than the height of a mountain.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து - அடக்கமுடைமை
பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்
The quality of humility benefits everyone. For those who are already wealthy, this quality becomes an additional wealth.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து - அடக்கமுடைமை
உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்
Just as a tortoise protects its limbs by drawing them into its shell, self-control over the five senses acts as a lifelong protector.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு - அடக்கமுடைமை
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்
If a person cannot protect anything else, they must at least control their speech; otherwise, their own words will become the cause of their suffering.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும் - அடக்கமுடைமை
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்
Just as a drop of poison in a pot of milk spoils the whole milk, even a single bad word in speech can turn all the good words into harmful ones, causing distress.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு - அடக்கமுடைமை
தீயினாலே சுடப்பட்ட புண் உள்ளே ஆறிவிடும்; ஆனால், நாவினால் சுட்ட வடுவானது உள்ளத்தில் ஒரு போதும் மறையவே மறையாது
A wound burned by fire may heal over time, but the pain caused by harsh words never truly fades from the heart.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து - அடக்கமுடைமை
கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்
One who learns what should be learned, controls their anger, and possesses the quality of self-restraint will always be protected by righteousness.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - இனியவை கூறல்
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்
When the words that come from a person’s mouth are filled with love, free from deceit, and truthful, they are called sweet words.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்- இனியவை கூறல்
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்
Speaking sweetly with a smiling face is a greater quality than simply giving something while keeping a cold heart.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்- இனியவை கூறல்
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்
Having a cheerful face and speaking kind words from a warm heart is the quality that aligns with the path of righteousness.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு - இனியவை கூறல்
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை
Those who speak sweetly and interact with everyone kindly will never experience the sorrow of "poverty in friendship."
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற - இனியவை கூறல்
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது
Apart from self-control and the ability to speak sweetly, there is no better adornment for a person.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------